நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நிறைவு!
10ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
22 தேர்தல் மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் பிற்பகல் 3 மணிவரையில் 55 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 47 சதவீத வாக்கு பதிவுகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 46.16 சதவீத வாக்கு பதிவுகளும், மன்னார் மாவட்டத்தில் 55 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, பிற்பகல் 2 மணி வரையான வாக்கு பதிவுகளுக்கமைய, வவுனியா மாவட்டத்தில் 58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அத்துடன் மொனராகலையில் 47 சதவீத வாக்குகளும், கண்டியில் 47 சதவீத வாக்குகளும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 47 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரத்தினபுரி மாவட்டத்தில் 55 சதவீத வாக்குகளும், பதுளை மாவட்டத்தில் 51 வாக்குகளும், நுவரெலியா மாவட்டத்தில் 55 சதவீத வாக்குகளும் கொழும்பு மாவட்டத்தில் 49 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் 41 சதவீத வாக்குகளும், மாத்தறை மாவட்டத்தில் 42 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.