சுஜீவவின் காரை சிஐடிக்கு பறிமுதல் செய்ய உத்தரவு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிடம் இருந்த சந்தேகத்திற்குரிய காரை காவலில் எடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த கார் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கை இன்று (11) கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.