4 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சக்கர நாற்காலியில் பயணித்த வயோதிப பயணி ஒருவர் நான்கு கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 58 வயதான கொழும்பு – 10, மருதானை பிரதேசத்தில் வசிப்பவர் என சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து விமான நிலைய சுங்க வளாகத்தில் சென்று கொண்டிருந்த போது, தனது உடலின் பின்பகுதியில் இருந்த “பேக் பேக்கில்” 05 கிலோ கிராம் போதைப்பொருளை மறைத்து வைத்திருப்பது. சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பயணியையும், அவர் கொண்டு வந்த குஷ் போதைப்பொருளையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது