இறந்தவர்கள் அழுவது போன்ற கனவு அடிக்கடி வருகின்றதா ?
நம்மில் அனைவருக்கும் ஒருமுறையாவது கனவு வந்திருக்கும்.
கனவுகளுக்கான பலன்களை சாஸ்திரங்கள் கணித்துள்ளது.
இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
- இறந்தவர்கள் உங்களின் கனவில் அடிக்கடி வந்தால் நல்ல செய்திகள் கிடைக்கும்.
- இறந்தவர்கள் ஆசி செய்வது போன்று கனவு வந்தால் உங்களுக்கு எல்லா விதமான நன்மைகளும் உண்டாகும்.
- இறந்தவர்களிடம் பேசுவது போன்ற கனவு வந்தால் உங்களின் பெயர், புகழ் அதிகரிக்கும் என்று பொருள்.
- இறந்தவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவது போன்ற கனவு, உங்களுக்கு வரக்கூடிய பெரிய கண்டத்திலிருந்து நீங்கள் தப்பிப்பீர்கள் என்று அர்த்தம்.
- சவப்பெட்டியை உங்கள் கனவில் வந்தால் நெருங்கியவர்கள் யாரேனும் இறக்கப் போகிறார்கள் என்று பொருள்.
- இறந்தவர்கள் உங்களுடன் சேர்ந்து சாப்பிடுவது போன்ற கனவு கண்டால் உங்களுக்கு நற்புகழும், செலவ செழிப்பும் உண்டாகும்.
- இறந்தவர்கள் உங்களுடம் பேசுவது போன்று கனவு கண்டால் உங்களுக்கு வரக்கூடிய சில இக்கட்டான நிலையிலிருந்து மீள்வீர்கள்.
- நாமே இறந்து விட்டது போன்ற கனவு உங்களுக்கு வந்தால் நம்முடைய ஆயுள் அதிகரிக்கும்.
- இறந்து போன உங்கள் தந்தை கனவில் வந்தால் நீங்கள் எல்லா பிரச்னைகளையும் சிறப்பாக கையாண்டு விரைவில் அதில் வெற்றி பெற முடியும் என்று அர்த்தம்.
- இறந்து போன தாய் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு சுப பலன்கள் ஏற்படும்.
- நம் அன்புக்குரிய, நமக்கு வேண்டப்பட்ட ஒருவர் இறந்தது போன்ற கனவு கண்டால் அதனால் உங்களுக்கு துன்பங்கள் நீங்கப்போகிறது என்று பொருள்.
- இறந்து போனவர்களை தூக்கிச் செல்வது போன்று கனவு கண்டால், உங்களுக்கு நன்மை உண்டாகும்.
- இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்து ஆசி செய்வது போன்று கண்டால் உங்களுக்கு அனைத்து நன்மையும் வந்து சேரும்.
- இறந்தவர் உங்கள் கனவில் வந்து அழுவது போன்று கண்டால், உங்களுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வருவது நல்லது.
- இறந்தவர்கள் உங்களுடன் பேசுவது போன்ற கனவு கண்டால் உங்களின் பெயர், புகழ் உண்டாகும் என்று பொருள்.
- உங்களின் இறந்த தாய், தந்தை கனவில் கண்டால், உங்களுக்கு வரக்கூடிய ஆபத்து, பிரச்சினைகளை சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தவர்கள் என்று பொருள்.
எச்சரிக்கை
இறந்தவர்கள் அழுவது போன்ற உங்கள் கனவில் வந்தால் அது நல்ல தல்ல. இந்த கனவு வந்தால் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து கொள்வது நல்லது. வீட்டை விட்டு செல்லும் போது விநாயகரை வழிபட்டு செல்லவும்.