பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த 3 நாடுகள்
பலஸ்தீனின் காசா, ராபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் கடந்த 9 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 35,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகள் பலவும் பலஸ்தீனுக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பலஸ்தீன் – இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்துள்ளது.
இந்நிலையில் அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் இதுகுறித்து கூறியதாவது, “ஸ்பெயின் மற்றும் நார்வேவுடன் ஒருங்கிணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அயர்லாந்துக்கும், பலஸ்தீனுக்கும் வரலாற்று சிறப்பு மிகுந்த நாளாகும். இஸ்ரேல் பாலஸ்தீன மோதலை தீர்க்க பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிப்பதே தீர்வாகும்” என தெரிவித்துள்ளார்.