தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு
நிலவும் மழை நிலைமை காரணமாக தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளில் ஆறு இன்று (09) காலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்க நீர்ப்பாசன பொறியியலாளர் கயான் வீரசூரிய தெரிவித்துள்ளார் .
திறக்கப்பட்ட ஆறு கதவுகளில், நான்கு கதவுகள் தலா 5 அடியும், இரண்டு கதவுகள் தலா 2 அடியும் திறக்கப்பட்டது. இதன்காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 16600 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுவதுடன் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் தெதுரு ஓயாவைச் சூழவுள்ள மக்களுக்கும் உரிய கவனம் செலுத்தப்படும் என பொறியியலாளர் தெரிவித்துள்ளார் .
இந்நிலையல் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையல்ல எனவும் அந்த பகுதிகளில் பெய்யும் மழையின் அடிப்படையில் இது மாறலாம் எனவும் நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. தெதுரு ஓயாநீர்த்தேக்கத்தின் மொத்த நீர் கொள்ளளவு 60000 ஏக்கர் அடியாகும்.