தாக்குதல் நடத்துபவர்களின் சொந்தங்களை நாட்டை விட்டு வெளியேற்றும் சட்டம் நிறைவேற்றம்

தாக்குதல் நடத்துபவர்களின் சொந்தங்களை நாட்டை விட்டு வெளியேற்றும் சட்டம் நிறைவேற்றம்

இஸ்ரேல் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பங்களை வெளியேற்றுவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கட்சி மற்றும் அவருடைய ஆதரவு வலதுசாரி கட்சிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன.

பாராளுமன்றத்தில் 61 உறுப்பினர்கள் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 41 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்

பாராளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் நீதிமன்றம் இந்த சட்டத்திற்கு தடைவிதிக்க வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள பலஸ்தீனர்கள், இணைக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ளவர்கள், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் தாக்குதல் குறித்து முன்னதாக தெரிந்துள்ளவர்களாக இருந்தால், பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அல்லது அடையாளத்தை தெரிவிப்பவர்களாக இருந்தால் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள். அவர்கள் ஏழு முதல் 20 ஆண்டுகளுக்கு காசா முனை அல்லது மற்ற பகுதிக்கு நாடு கடத்தப்படுவார்கள்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு இந்த சட்டம் பொருந்துமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை, அங்கு இஸ்ரேல் ஏற்கனவே தாக்குபவர்களின் குடும்ப வீடுகளை இடிக்கும் நீண்டகாலக் கொள்கையைக் கொண்டுள்ளது.

இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )