வெண்டைக்காய் துவையல்
வெண்டைக்காய் துவையல் அப்படின்னு சொன்ன உடனே அது எப்படி இருக்கும்? நல்லாருக்குமா அப்படின்னு ஒரே யோசனையா இருக்கும். ஆனா ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க ருசியா இருக்கும்.
நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க. நம்ம கொள்ளு பருப்புல துவையல், துவரம் பருப்புல துவையல், தேங்காய் துவையல், மல்லி துவையல், புதினா துவையல், அப்படின்னு நிறைய துவையல் செஞ்சிருப்போம். ஆனா இந்த மாதிரி ஒரு தடவை துவையல் செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
இது வெண்டைக்காய் துவையல் அப்படின்னே தெரியாது. ரொம்ப ரொம்ப ருசியா இருக்க கூடிய இந்த வெண்டைக்காய் துவையல சுட சுட சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்- 1/4 கி
கடலை பருப்பு- 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு- 1 டீஸ்பூன்
வர மிளகாய்- 2
பெரிய வெங்காயம்-1
பூண்டு- 3 பல்
புளி- நெல்லிக்காய் அளவு
கடுகு- 1 டீஸ்பூன்
பூண்டு-5
புளி- சிறிதளவு
கறிவேப்பிலை- ஒரு கொத்து
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெண்டைக்காயை வதக்குவதிலேயே முக்கால் பதம் வெந்துவிட வேண்டும் அந்த அளவிற்கு வதக்க வேண்டும்.
பிறகு அதனை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்றாக ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து வெண்டைக்காயையும் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்தால் சுவையான வெண்டைக்காய் துவையல் தயார்.