‘விட்டமின் கே’ அதிகம் உள்ள உணவுகள்
விட்டமின் கே என்பது ஒரு வகையில் கொழுப்பில் கரையும் விட்டமின் ஆகும்.
இது மூளை, இதயம், கல்லீரல் போன்ற உடலின் பல பகுதிகளிலும் சேமிக்கப்படுகிறது.
அதனால் போதிய அளவு விட்டமின் கே உடலுக்கு கிடைக்கும் உணவுப் பொருட்களை உண்ண வேண்டும்.
திராட்சை
திராட்சையில் விட்டமின் கே அதிகம் உள்ளது. எனவே வாரத்துக்கு இரண்டு தடவைகளாவது திராட்சைப் பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒலிவ் எண்ணெய்
ஒலிவ் எண்ணெயில் அதிகளவான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதில் விட்டமின் கேயும் ஒன்றும். எனவே செலட் போன்றவற்றில் ஒலிவ் எண்ணெயை சேர்த்துக்கொள்ளவும்.
கெரட்
கெரட்டில் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் கே அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வெண்டைக்காய்
காய்கறிகளிலேயே வெண்டைக்காய் அதிக சத்துக்கள் நிறைந்தது. எனவே தினசரி உணவில் வெண்டைக்காய் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது.
மாதுளம்பழம்
இதில் ஆன்டி ஆக்சிடண்ட்கள், விட்டமின் சி, விட்டமின் கே போன்றவை அதிகளவில் உள்ளன. இது உடலிலுள்ள ஹீமேகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
முந்திரி
முந்திரியில் கலோரிகள் சற்று அதிகமாக இருந்தாலும் புரதங்கள் மற்றும் உடலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்களும் அதிகம் உள்ளன. மேலும் முந்திரியில் உள்ளடங்கியிருக்கும் விட்டமின் கே மற்றும் பொட்டாசியம் இரத்த உறைதலைத் தடுக்கும்.