சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது
பதுளை, செல்வகந்த தியனகல பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை கைதுசெய்துள்ளதோடு 5,76,500 மில்லிலீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செல்வகந்த தியகல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பதுளை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அமைய பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பேரில் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியரத்ன தலைமையில் பசறை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தேயிலை தோட்ட நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பெர்ல்களையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka