இறைச்சிக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 நாய்கள் மீட்பு ; 4 பேர் கைது

இறைச்சிக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 நாய்கள் மீட்பு ; 4 பேர் கைது

அசாம் மாநிலத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 நாய்களை பொலிஸார் மீட்டனர். நாய்களை கடத்தியதாக 4 பேரை பொலிஸார் கைது செய்தனர்

இந்த நாய்களை அசாம் மாநிலத்தில் இருந்து நாகாலாந்திற்கு கொண்டு சென்று நாய் இறைச்சிக்கு விற்பனை செய்ய கைது செய்யப்பட்டவர்கள் திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாகாலாந்தின் பல்வேறு பகுதிகளில் நாய் இறைச்சி பொதுமக்கள் சாப்பிடுகின்றனர். 2020 ஆம் ஆண்டு நாய் இறைச்சி வியாபாரத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டு கவுகாத்தி உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை இரத்து செய்தது.

நாகாலாந்தில் நாய் இறைச்சி சாப்பிடப்பட்டாலும் பிற மாநில மக்கள் நாய் இறைச்சியை சாப்பிடுவதில்லை.

ஆகையால் பிற மாநிலங்களில் இருந்து நாகாலாந்திற்கு நாய்களை இறைச்சிக்காக கடத்தும் போக்கு அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )