சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் எதிரியா?
வெந்தயம் என்றாலே ஜீரணத்திற்கும், உடல் உஷ்னத்திற்கும் தான் ஞாபகம் வரும்.இந்த வெந்தயத்தை நாம் தினமும் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் எண்ணற்ற பலன்கள் நம் உடலில் உண்டாகும்.
சத்துக்கள்
வெந்தயத்தில் புரதம், கொழுப்பு, நீர், மாவு, ஆகிய சத்துக்குள் அடங்கியுள்ளன. மினெரல், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
வெந்தயத்தின் தீமைகள்
- அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு, என்பதைப்போல எந்த ஒரு உணவையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் பாதிப்பை விளைவிப்பதாகவே அமையும்.
- அதிக அளவில் வெந்தயத்தை எடுத்துக்கொள்வதால் வாந்தி, குமட்டல் ஏற்படும்.
- உணவுக்கோளாறு இருப்பவர்கள் வெந்தயத்தை உட்கொள்ளவே கூடாது.
- மேலும் நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்றால், மருத்துவரை ஆலோசித்த பின்னரே வெந்தயத்தை உட்கொள்ள வேண்டும்.
- இரண்டையும் எடுத்துக்கொண்டால் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து விளைவுகள் விபரீதமாகிடும்.