ராட்சத பூசணிக்காயை படகாக மாற்றி பயணித்து கின்னஸ் சாதனை

ராட்சத பூசணிக்காயை படகாக மாற்றி பயணித்து கின்னஸ் சாதனை

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தைச் சேர்ந்தவர் கேரி கிறிஸ்டென்சன் . கின்னஸ் சாதனை முயற்சிக்காக கடந்த 2011 முதல் இவர் தனது தோட்டத்தில் ராட்சத பூசணிக்காயை வளர்த்து வருகிறார். அதன்படி இந்த ஆண்டு சுமார் 500 கிலோ கிராம் எடை கொண்ட பூசணிக்காயை வளர்த்தார். பின்னர் அந்த பூசணி மூலம் ஒரு படகை உருவாக்கினார்.

இதனையடுத்து கின்னஸ் சாதனை முயற்சியாக கொலம்பியா ஆற்றில் அந்த படகை துடுப்பு மூலம் செலுத்தினார். அதன்படி போன்வில்லே நகரில் இருந்து வான்கூவர் வரை 73 கிலோ மீட்டர் தூரத்துக்கு அந்த படகில் சென்றார். 26 மணி நேரம் நீடித்த இந்த கின்னஸ் சாதனை முயற்சி சமூகவலைதளங்களில் வைரலாகியது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )