தட்டம்மை தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்
தட்டம்மை தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்று, இன்று (04) முதல் எதிர்வரும் 9ம் திகதி வரை முன்னெடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும் இந்த பிரிவில், தட்டம்மை உள்ளிட்ட தொற்றுநோய்கள் குறித்து மக்கள் விசாரிக்க முடியும்.
0117446513, 0117682722, 011768 28 72 அல்லது 0117682662 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.