இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை எச்சரித்த ஈரான் தலைவர்

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை எச்சரித்த ஈரான் தலைவர்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ் ஆயுதக்குழு, ஹிஸ்புல்லா அமைப்பு, ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இதற்கிடையே, கடந்த ஒக்டோபர் 2-ம் திகதி இஸ்ரேல்மீது ஈரான் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 26-ம் திகதி ஈரான் தலைநகர் மற்றும் பிற நகரங்களில் உள்ள இராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஈராக்கில் இருந்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் உயரிய தலைவரான அயத்துல்லா அலி கமேனி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மாணவர்கள் மத்தியில் பேசிய அயத்துல்லா அலி கமேனி, ஈரான், “ஈரான் மண் மற்றும் எதிர்ப்பு கூட்டணிக்கு (ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி, ஈராக்கில் செயல்படும் பயங்கரவாதிகள்) எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக எதிரிகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நிச்சயம் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )