நாகை – இலங்கை கப்பல் சேவையின்  நாட்கள் அதிகரிப்பு

நாகை – இலங்கை கப்பல் சேவையின் நாட்கள் அதிகரிப்பு

இரு நாட்டு பயணிகளிடம் அதிக வரவேற்பு இருப்பதால், நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் 8ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை – இலங்கை இடையே ‘சிவகங்கை’ என்ற பயணிகள் கப்பல்சேவை கடந்த ஆகஸ்ட் 16-ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில், பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால், செவ்வாய், வியாழன், ஞாயிறு என வாரத்தில் 3 நாட்களாக கப்பல் சேவை குறைக்கப்பட்டது. பின்னர், சனிக்கிழமை உட்பட 4 நாட்களுக்கு கப்பல் சேவை நடைபெற்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )