ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா

ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிகாண் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது

நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்தது.

அதற்கமைய, 19.3 ஓவர்களின் நிறைவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை பதிவு செய்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 55 ஓட்டங்களையும் ஹென்ரிச் கிளாசென் (Heinrich Klaasen) 32 ஓட்டங்களையும் பாட் கம்மின்ஸ் (Pat Cummins) 30 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.

பந்து வீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில்
மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) மூன்று விக்கெட்டுகளையும்
வருண் சக்கரவர்த்தி (Varun Chakaravarthy) இரண்டு விக்கெட்டுகளையும் ஆண்ட்ரே ரஸ்ஸல் (Andre Russell) ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 165 எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13.4 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) 58 ஓட்டங்களையும் வெங்கடேச ஐயர் (Venkatesh Iyer)
51 ஓட்டங்களையும் ரஹ்மானுல்லா குர்பாஸ் (Rahmanullah Gurbaz )
23 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.

பந்து வீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில்

டி.நடராஜன் (T. Natarajan) மற்றும் பாட் கம்மின்ஸ் (Pat Cummins) தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர் .

இந்த வெற்றியின் மூலம் 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தெரிவாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )