வழக்கு விசாரணையில் பிரதிவாதியாக ரணில்

வழக்கு விசாரணையில் பிரதிவாதியாக ரணில்

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோனை நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை
பிரதிவாதியாக பெயரிடுவதற்கு உயர் நீதிமன்றம் நேற்று (29) அனுமதியளித்துள்ளது.

குறித்த நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (29) உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்து, இந்த மனுவில் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பெயரிட அனுமதி கோரினார்.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட அனுமதித்த மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு, மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )