தபால் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்

தபால் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல வாக்களிப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றும் அடுத்த மாதம் 04 ஆம் திகதியும் தபால் மூல வாக்களிப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், முப்படை முகாம்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை நவம்பர் மாதம் முதலாம் திகதி மற்றும் நவம்பர் 4ஆம் திகதிகளில் அடையாளப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தினங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத தபால் மூல வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்திலுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தபால் வாக்கினைக் அடையாளப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தபால் வாக்குகளை அடையாளப்படுத்துவதற்கு நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்த முடியாது என சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பயன்படுத்தப்பட்ட தபால் வாக்கு பாதுகாப்பு பொதிகளை இன்று முதல் ஏற்றுக்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வருட பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக ஏறக்குறைய ஆயிரம் உத்தியோகத்தர்களை பணியமர்த்த எதிர்பார்த்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )