மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு

மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு

டெங்கு நோயால் இம்மாதம் மாத்திரம் 2,658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதற்கமைய, இவ்வருடம் ஆரம்பித்து காலப்பகுதி வரை 42,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 17,925 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதும் இம்மாகாணத்திலேயே என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )