மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற டிசெம்பர் மாதம் 26-ந்திகதி நடைபெறவுள்ளது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்திகதி திறக்கப்படுகிறது.
சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசனுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு மேற்கொண்டு வருகிறது.
மேலும் கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசனில் கூடட நெரிசலால் பகதர்கள் அவதிப்பட்டதை போன்று, நடக்காமல் இருக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவுள்ளது. அது தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
இந்நிலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “தேவசம்போர்டின் டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு பகுதியாக இணையதளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது விரிவான மாற்றங்களுடன் மண்டல பூஜை காலத்திற்கு முன் அமைக்கப்படும்.
பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் “வைபை” வசதி செய்வது பரிசீலனையில் உள்ளது. சன்னிதானம், பதினெட்டாம்படி, கோவில் முற்றம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.
.