கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை ஆரம்பம்

கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை ஆரம்பம்

மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான ரயில் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையான ரயில் சேவை இன்று (28) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி புகையிரத பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தினமும் வடக்கு ரயில் பாதையில் பயணிக்கும் என்றும், ரயில் கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் ரயில்வே திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி இந்த ரயில் நேர அட்டவணைக்கு அமைய,

  • கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் ரயில் பிற்பகல் 12.38க்கு திருகோணமலையை சென்றடையும்.
  • பிற்பகல் 1.30 க்கு திருகோணமலையில் இருந்து புறப்படும் ரயில் இரவு 7.59 க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.
  • கொழும்பு கோட்டையில் இருந்து காலை5.45 க்கு புறப்படும் ரயில் பிற்பகல் 3.15 க்கு மட்டக்களப்பை சென்றடையும்.
  • கொழும்பு கோட்டையில் இருந்து பிற்பகல் 3.15 க்கு புறப்படும் புகையிரதம் இரவு 10.22 க்கு மட்டக்களப்பை சென்றடையும்.
  • மட்டக்களப்பில் இருந்து பிற்பகல் 1.40 புறப்படும் ரயில் இரவு 8.55க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.
  • மட்டக்களப்பில் இருந்து இரவு 6.10 க்கு புறப்படும் ரயில் இரவு 8.55க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )