பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு

பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு

ஹோட்டலில் இருந்து வாங்கிய பிரியாணியை சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிரியுல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பிரியாணியை சாப்பிட்டு ஒவ்வாமை ஏற்பட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிரியுல்ல, மத்தேபொல, ஹென்யாய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

கிரியுல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பிரியாணி பொதியினை மேலும் மூவருடன் சேர்ந்து குறித்த சிறுமி சாப்பிட்டுள்ளார். ஆனால், அந்த உணவை சாப்பிட்டதும் சிறுமிக்கு மட்டும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வாமை காரணமாக தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )