வனவிலங்கு சட்டங்களை மீறியதாக வெளிநாட்டு யூடியூபர் மீது விசாரணை
மாதுரு ஓயா தேசிய பூங்காவில் மயில் ஒன்றை வேட்டையாடி கொன்று சமைத்து உணவாக உட்கொண்ட காட்சி சமூக ஊடகங்களில் ஒன்றான யூடியூப் தளத்தில் பகிரப்பட்ட காணொளி தொடர்பில் வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு வேடுவச் சமூகத்தினர் மீது வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த காணொளி ‘கோ வித் அலி’ (Go With Ali) என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது.
அதில் தேசிய பூங்காவிற்குள் ஒரு குழுவினர் மயில் ஒன்றை வேட்டையாடி விறகு அடுப்பில் சமைத்து உட்கொள்ளும் காட்சி காணொளியாக படம்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு வேடுவச் சமூகத்தினர் அடங்கிய குழுவினர் தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசித்தமை தொடர்பில் முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவர்கள் மீது மாதுரு ஓயா தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்தமை, தீ மூட்டடியமை, பாதுகாக்கப்படும் பறவை இனத்தை வேட்டையாடி கொன்றமை, அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததமை ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இதேபோன்றதொரு சம்பவம் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளது. அதாவது, மாதுரு ஓயா தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டவர் மற்றும் தமபன பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வேடுவச் சமூகத்தினர் மயிலை வேட்டையாடி உட்