பாலைவனத்தில் தவித்த பெண்ணுக்கு ஒட்டகம் அனுப்பிய ஊபர்

பாலைவனத்தில் தவித்த பெண்ணுக்கு ஒட்டகம் அனுப்பிய ஊபர்

போக்குவரத்து சேவைக்கு கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை வாடகைக்கு முன்பதிவு செய்து பயன்படுத்தும் போக்கு நகர பகுதிகளில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவி வரும் ஒரு வீடியோவில் துபாயில் பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் ஒரு பெண்ணை காட்டுகிறது.

அதில், அந்த பெண் வாகனம் பழுதடைந்த பிறகு வறண்ட பாலாவன பகுதியின் நடுவில் சிக்கி தவிக்கிறார். அப்போது தனது செல்போனில் உள்ள ஊபர் செயலியில் முன்பதிவு செய்ய முயற்சி செய்கிறார்.

அந்த செயலியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு இடையே ஒட்டக சவாரிக்கும் ஆர்டர் செய்யும் வசதி இருப்பதை பார்த்து வியக்கிறார். பின்னர் அவர் ஒட்டக சவாரிக்கு முன்பதிவு செய்த நிலையில் சில நிமிடங்களில் ஒரு வாலிபர் ஒட்டகத்துடன் அங்கு வருகிறார்.

இந்த வீடியோ துபாய்-கட்டா சாலையில் உள்ள அல்-படேயர் பகுயில் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 1 லட்சம் லைக்குகளை பெற்றுள்ள இந்த வீடியோ 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. ஒரு பயனர் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )