ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரே ப்ரென்ச் மற்றும் பிரதமர் ஹரிணிக்கிடையிலான சந்திப்பு நேற்று (22) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில், மார்க் அன்ட்ரே ப்ரென்ச் பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கென வழங்கப்படும் ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்புக்களையும் உறுதிப்படுத்தினார்.
இலங்கையின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தலுக்கான திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது.
குறித்த சந்திப்பின் போது மகளிருக்கான ஊக்குவிப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் முன்னெடுக்கப்படும் மகளிருக்கான ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்க ஆர்வமுடன் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கான பணிப்பாளர் நாயகம் தயானி மென்டிஸ் உட்பட ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தைச் சேர்ந்த பெட்ரிக் மெக் கர்த்தி மற்றும் நெத்மினி மெதவல ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.