ரவி செனவிரத்னவை பதவி நீக்க மாட்டோம்
பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் நோக்கங்களுக்கு எங்களால் அடிப்பணிய முடியாது என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “எக்காரணத்துக்காகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவையும் ஷானி அபேசேகரவையும் பணி நீக்கம் செய்ய மாட்டோம்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சாகர ரத்னாயக்கவின் தனிப்பட்ட தேவைக்காக நியமிக்கப்பட்ட ஏ. என். ஜே. தி அல்விஸ் அறிக்கையை எங்களால் ஏற்று கொள்ளவும் முடியாது” என தெரிவித்துள்ளார்.