சிறைச்சாலை அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு
சுகவீன விடுமுறையை அறிவித்து சிறைச்சாலை அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று (20) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
25,000 ரூபாய் வேதன அதிகரிப்பைக் கோரி சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka