கடவுச்சீட்டு விநியோகம்வழமைக்குத் திரும்பியது !

கடவுச்சீட்டு விநியோகம்வழமைக்குத் திரும்பியது !

நாட்டில் கடந்த சில வாரங்களாக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்த கடவுச்சீட்டு
விநியோகம், நேற்று முதல் (21) வழமைக்குத் திரும்பியுள்ளது.

கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஒரு தொகை புதிய கடவுச்சீட்டு, நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அதற்கிணங்க நேற்று முதல் (21) கடவுச்சீட்டு விநியோகம் வழமை போன்று இடம்பெறுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய கடவுச்சீட்டு நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், கடவுச்சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்குத் தடையின்றி கடவுச்சீட்டினை வழங்குவதற்குப் போதுமான வகையில், கடவுச் சீட்டுக்களை கொள்வனவு செய்வது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு அதற்கான அமைச்சரவை அனுமதியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதிகளவு கடவுச்சீட்டுகளை விலை மனுக்கோரல் நடைமுறையின் மூலம், கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.

இதனால் அது தொடர்பான தீர்ப்பு கிடைத்தவுடன் ஈ-பாஸ்போர்ட் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நேற்று முதல் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )