ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்  !

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார் !

ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே, காசாவில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளது.

ஹமாஸ் தலைவர் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாஹ்யா சின்வாரை அவர் ‘படுகொலை மற்றும் அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்த மூளை’ என்று வர்ணித்துள்ளார்.

மேலும் “இது இஸ்ரேலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க இராணுவ மற்றும் தார்மீக சாதனை. ஈரான் தலைமையிலான தீவிர இஸ்லாத்தின் தீய அச்சுக்கு எதிராக முழு சுதந்திர உலகிற்கும் கிடைத்த வெற்றி,” என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் மரணமடைந்தார். இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் நல்ல நாள் என பதிவிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )