இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய தடை

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய தடை

பலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் அண்டை நாடான இஸ்ரேலுக்கு புகுந்து திடீர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் பலர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினர் மீது போரை தொடங்கியது. இதில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை உயிரிழந்தநிலையில் ஒரு ஆண்டை கடந்து போர் நீடித்து வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் இராணுவம் போர் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருந்து வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “காசா பகுதியில் போர் நீட்டிப்பை தொடர்ந்து, இத்தாலியில் இருந்து இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து புதிய உரிமங்களுக்கும் உடனடியாக நிறுத்தப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )