தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து  செய்யக்கோரி மனு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யக்கோரி மனு

செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் தாள் I மற்றும் இரண்டாம் தாள்களை இரத்து செய்யுமாறு உத்தரவிடுமாறு கோரி 27 மாணவர்கள், அவர்களது பெற்றோருடன் இணைந்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை நேற்று (15) தாக்கல் செய்துள்ளனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துமாறும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்தாமல் இருப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் திங்கட்கிழமை (14) காலை நடைபெற்ற கூட்டத்தின் போது தீர்மானித்துள்ளது.

அத்துடன், கசிந்ததாகக் கூறப்படும் மூன்று வினாக்களுக்கும் இலவச புள்ளிகளை வழங்குவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஏழு பேர் கொண்ட குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து திங்கட்கிழமை (14) இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டாம் என அக்குழு முடிவு செய்துள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )