மேல் மற்றும் தென் மாகாண பாடசாலைகள் நாளை திறப்பு
மேல் மற்றும் தென் மாகாணங்களில் விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை (16) திறக்கப்படும் என அந்தந்த மாகாணங்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களாகப் பயன்படுத்தப்பட்ட பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் தீர்மானிக்க மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.