தேசிய மக்கள் சக்தி மறுத்ததால்   ஐக்கிய மக்கள் குரல் சார்பில் களம் இறங்கியுள்ளேன்

தேசிய மக்கள் சக்தி மறுத்ததால் ஐக்கிய மக்கள் குரல் சார்பில் களம் இறங்கியுள்ளேன்

தேசிய மக்கள் சக்தியில் ஆசனம் கிடைக்காததால் ஐக்கிய மக்கள் குரல் சார்பில் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சியில் அவருடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் பொதுத் தேர்தல் களம் இறங்கியுள்ளேன் என மலையக மக்கள் முன்னணி ஸ்தாபகர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் புதல்வி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில், நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, மலையக மக்களுக்கான குரலாக, நுவரெலியா மாவட்டத்தில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிடுவதாகத் தெரிவித்த தலைமை வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் நுவரெலியாவில் எமது குரல் ஒலிக்கும் அதே நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் ஆசனங்களை வென்றெடுப்பதற்கான நடவடிக்கையில் நாம் களம் இறங்கியுள்ளதில் எவ்வித ஐயமும் இல்லை.

எம்மை பொறுத்தவரையில், பகிரங்க அரசியல் வேறு, எனது கடந்த கால அரசியல் வேறு, எல்லா விடயத்தையும் நாங்கள் பகிரங்கமாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை. சில இடங்களில் சில நேரங்களில் அரசியலில் மௌனம் காக்க வேண்டும். ஆகவே இவ்வளவு நாள் என்னுடைய சேவைகளிலும், அரசியல்
செயற்பாட்டிலும் நான் பகிரங்கமாக இருக்கவில்லை என்றார்.

“தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தாக தெரிவித்தார்கள். நீங்கள் ஏன்? அதில் போட்டியிடவில்லை” என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அவர், தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட நான் அவர்களிடம் ஆசனம் ஒன்று கேட்டிருந்தேன். அவர்கள், ஆசனம் தருவதாகக் கூறி இருந்தார்கள் அதற்கான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டது.

எனினும், தங்களுடைய கட்சியில் நீண்ட காலமாக இருந்தவர்களுக்கு ஆசனம் வழங்குவதாகவும் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக அக்கட்சியில் இருந்தவர்கள் அல்லது அக்கட்சிக்கு உழைத்தவர்களுக்கு ஆசனம் வழங்குவதாகவும் ஆகையால் எனக்கு ஆசனம் இல்லை எனவும் தெரிவித்தனர்.

ஆனால், நாம் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் விதத்தில் தான் நாங்கள் தற்போது ரஞ்சன் ராமநாயக்கவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் குரல் கட்சியில் செயல்படத் தொடங்கினோம். காரணம் அரசாங்கம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட நாம் இவ்வாறு களம் இறங்கி உள்ளோம்
என்றும் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )