உள்நாட்டு மருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

உள்நாட்டு மருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக பின்னரான கொள்வனவு செய்தல் ஒப்பந்தப் (Buy Back Agreement) பொறிமுறையின் கீழ் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவைக் ஒப்பதல் வழங்கியுள்ளது. 

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள உள்நாட்டு மருந்து உற்பத்திக் கம்பனிகளின் உற்பத்திகளுக்கு 15 ஆண்டுகளுக்கான பின்னரான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் வழங்கப்படும் முன்னுரிமையின் அடிப்படையில் குறித்த மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கும், சுகாதார அமைச்சுடன் உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்களுக்கிடையில் மருந்துகள் விநியோகிப்பதற்கான பின்னரான ஒப்பந்தத்தை 10 ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தவும், 2018.10.02 அன்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

விநியோகிக்கப்படும் மருந்துகளின் விலையைத் தீர்மானிப்பதற்காக விலை நிர்ணயக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்துகளைக் கொள்வனவு செய்கின்ற முறைக்கமைய தற்போதுள்ள மருத்துவ விநியோகத் தேவையின் 20 சதவீதம் உள்ளடக்கப்படுவதுடன், குறித்த அளவை 40 சதவீதம் வரை அதிகரிப்பதற்கான இயலுமை காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ விநியோகங்கள் 454 இனை விநியோகிப்பதற்கான இயலுமை காணப்படுகின்ற 49 உள்நாட்டு மருந்துகள் உற்பத்தி நிறுவனங்கள் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவால் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் மருந்துகள் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் மருந்துகள் உற்பத்திச் செயன்முறைக்கும் தற்போது பின்னரான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில், அடையாளங் காணப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு ஒரு வருடத்திற்காக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ விநியோகத்தை மேற்கொள்வதற்காக பின்னரான கொள்வனவு செய்தல் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )