சுதந்திர தின மேற்பார்வைக்காக 2 விசேட குழுக்கள் நியமனம்

சுதந்திர தின மேற்பார்வைக்காக 2 விசேட குழுக்கள் நியமனம்

2025 பெப்ரவரியில் 77வது சுதந்திர தின விழாவை நடத்துவதற்கான வழிகாட்டல் மற்றும் மேற்பார்வைக்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பௌத்த, மத மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் ஆகியோரின் பங்கேற்புடன் அமைச்சரவை அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டங்களை பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்வதற்கு முப்படை மற்றும் பொலிஸ் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதான அதிகாரிகளின் பங்களிப்புடன் கண்காணிப்புக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சர் என்ற வகையில், இரண்டு குழுக்களின் நியமனம் தொடர்பான பிரேரணை பிரதமரால் முன்வைக்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )