சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையில் நேற்று (15) மாலை வரை மூவர் உயிரிழந்துள்ளனர். இருவர் காயம் அடைந்துள்ளனர்.

கடும் மழையுடனான சீரற்ற காலநிலையில் நாட்டில் 16 மாவட்டங்களில் 89 பிரதேச செயலகப் பிரிவுகளில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.வெள்ளம் மற்றும் மண்சரிவால் 321 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

சீரற்ற காலநிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்குரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )