மேற்கிந்திய தீவுகளுடனான 2 ஆவது டி20 : முதல் போட்டியில் தோற்ற இலங்கை தொடர் தோல்வியை தவிர்க்க களத்தில் !
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி தொடர் தோல்வியை தவிர்க்கும் நோக்குடன் இன்று (15) இரண்டாவது டி20 போட்டியில் ஆடவுள்ளது.
மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த டி20 தொடரில் இலங்கை அணி தற்போது 0–1 என பின்னடைவைச் சந்தித்துள்ளது. ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 180 ஓட்டங்களையும் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்
கெட்டுகளை இழந்து 19.1 ஓவர்களில் எட்டியது.
ஆரம்ப வீரர்களான பிரண்டன் கிங் மற்றும் எல்வின் லுவிஸ் 107 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றனர்.
பிரன்டன் கிங் 33 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 63 ஓட்டங்களை பெற்றதோடு லுவிஸ் 28 பந்துகளில் 50 ஓட்டங்களை விளாசினார்.
இதன்போது இலங்கை பந்துவீச்சாளர்களால் எதிரணியின் ஓட்ட வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
மத்தீஷ பத்திரண மாத்திரம் 3.1 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ஓட்டங்களை அதிகரிக்க முடியாமல் போனது.
எனினும் மத்திய வரிசையில் கமிந்து மெண்டிஸ் 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 51 ஓட்டங்களைப் பெற்றார்.
அதே போன்று அசித்த பெர்னாண்டோ 49 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 59
ஓட்டங்களை குவித்தார்.
இதன்போது இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்காக 82 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
எனினும் கடைசி நேரத்தில் இலங்கை அணியால் வேகமாக ஓட்டங்களைப் பெற முடியவில்லை.
இதனால் இலங்கை அணி 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களையே பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டியும் அதே தம்புள்ளை மைதாயத்தில் நடைபெறவுள்ளது.