வயிற்றுவலியை போக்கும் வாழைப்பூ

வயிற்றுவலியை போக்கும் வாழைப்பூ

-வாழைப்பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், வயிற்றுவலி மற்றும் குடல்புண், இரத்தபேதி, மூலநோய் ஆகியவை குணமாகும்.

– கை, கால் எரிச்சலுக்கு வாழைப்பூவை இடித்து, அதில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒற்றடமிட்டு கட்டலாம்.

– வெள்ளைப்படிதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை ரசம் செய்து, அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

– வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு, வயிற்றுக்கடுப்பு போன்றவை நீங்கும்.

– வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடி சேர்த்து குடிக்க மூலநோய் குணமாகும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் இரத்த மூலம் குணமாகும். தாது விருத்தியடையும்.

– வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் இருந்தாலும் தீரும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )