மும்பை பயிற்சியாளர் பதவி மஹேலவிடம் !
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இந்திய பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் கடந்த இரண்டு ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணியின்
பயிற்சியாளராக செயற்பட்ட மார்க் பௌச்சருக்கு பதில் 2025 தொடரில் பயிற்சியாளராக செயற்படவுள்ளார்.
ஜயவர்தன முன்னதான 2017 தொடக்கம் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜயவர்தனவின் பயிற்சியின் கீழ் மும்பை அணி மூன்று முறை சம்பியன் கிண்ணத்தை வென்றது.
‘மும்பை இந்தியன்ஸின் தலைமை பயிற்சியாளராக மஹேல திரும்பி இருப்பதையிட்டு நாம் உற்சாகம் அடைந்துள்ளோம்’ என்று மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மார்க் பௌச்சரின் பயிற்சியின் கீழ் 2023இல் பிளே ஓப் வரை ஆடிய மும்பை அணி இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் 14 போட்டிகளில் நான்கில் மாத்திரம் வென்று கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டது.