மழைக் காலநிலையால் நோய்கள் பரவும் அபாயம்!
நிலவும் மழையுடனான காலநிலையால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முறையான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது அத்தியாவசியமானது என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென கொழும்பு சீமாட்டி ரிஜ்வேசிறுவர் வைத்தியசாலையின் விசேடமருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.