சுவையான மொறுமொறுவென்று ‘முருங்கைப்பூ வடை’ 10 நிமிடத்தில் எப்படி செய்வது?
முருங்கைக் கீரையில் புரதம், கல்சியம், விட்டமின் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
அதன்படி முருங்கைப் பூ கீரை எவ்வாறு செய்வதெனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- முருங்கைப் பூ (காம்பு நீக்கி சிறிதாக அரிந்துகொள்ள வேண்டும்)- 200 கிராம்
- துவரம் பருப்பு – 50 கிராம்
- கடலைப் பருப்பு – 100 கிராம்
- வெங்காயம் (சிறிதாக வெட்டிக் கொள்ளவும்) – 2
- பச்சை மிளகாய் – 4
- உளுந்து – 50 கிராம்
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
முருங்கைப் பூ, பச்சை மிளகாய், வெங்காயம் போன்றவற்றை சிறிதாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் அரைத்து வைத்திருக்கும் பருப்பு கலவையில் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
தொடர்ந்து பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மாவை வடைகளாகத் தட்டி பொரிக்கவும்.