பொதுத் தேர்தலில் இருந்து விலகினார் அஜித் மான்னப்பெரும

பொதுத் தேர்தலில் இருந்து விலகினார் அஜித் மான்னப்பெரும

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தேர்தலில் இருந்து விலகுவதாகவும் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா தொகுதியின் பிரதம அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் நான் வேட்பாளராக உள்ளேன்.

அத்துடன், 20 வருடங்களாக கம்பஹா தொகுதி அமைப்பாளராக கடமையாற்றி வருகின்றேன்.

ஆனால் இம்முறை என்னை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக நியமித்தாலும், வாக்கு கேட்பதைத் தவிர்க்க எண்ணினேன்.

நான் குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை, எனவே அந்த வாக்கை எனக்காக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவால் நான் விரக்தியடைந்துள்ளேன்.

வேட்புமனுவில் கையொப்பமிட்டு 24 மணித்தியாலங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்கிரமசிங்கவிடம் பணியாற்றிய ஒருவருக்கு கம்பஹா தொகுதியின் ஆசன அமைப்பாளர் பதவி இரகசியமாக வழங்கப்பட்டது. இது மிகவும் வெறுப்பாக உள்ளது” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )