திருமண நிகழ்வில் தகராறு ; ஒருவர் படுகொலை

திருமண நிகழ்வில் தகராறு ; ஒருவர் படுகொலை

அங்குலான பிரதேசத்தில் திருமண நிகழ்வில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அங்குலான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சயுருபுர அடுக்குமாடி குடியிருப்பு சமூக மண்டபத்தில் நேற்றிரவு (11) இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது இசையின் ஒலியை குறைக்குமாறு நபரொருவர் இசை நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் (டிஜே) கேட்டபோது இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டபோது ஒருவர் மற்றைய நபரை தாக்கியுள்ளார்.

இத்தாக்குதலில் காயமடைந்த ஒருவர் லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அங்குலான பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அங்குலான பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் தாக்குதல் நடத்திய பின்னர் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் அங்குலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )