பிரதமரின் படத்தை பயன்படுத்த அனுமதி பெற வேண்டும்
அரச நிறுவனங்களின் ஊடாக நடத்தப்படும் வெவ்வேறு நிகழ்வுகள் மற்றும் வேலைத்திட்டங்களின் போது பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் படத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி பெறப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல் பிரதமரின் செயலாளர் பிரதீப் யசரத்வின் கையெழுத்துடன் சகல அரச நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.