திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து : 19 பேர் படுகாயம் (படங்கள்)
மைசூருலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில், இரண்டு ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன.
தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கவனக்குறைவே இந்த ரயில் விபத்திற்கு காரணம் என ரயில்வே இருப்புப்பாதை பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.