திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இலட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி !

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இலட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி !

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 22 அரசியல் கட்சிகளும், 50 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தமாக 72 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை
மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான சிந்தக அபேவிக்கிரம தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி, சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சமாஜவாதி கட்சி, ஜனவத பெரமுனை, அகில இலங்கை தமிழ் மகாசபை, ஸ்ரீ லங்கா ஜீவ
கஜாதிக பெரமுன, ஈ.பி.டி.பி, அபே ஜனபல, தேசிய ஜனநாயக முன்னனி, ஆகிய கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 07 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 10 பேர் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சைக்குழுவிலிருந்து போட்டியிடுவர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்பன தனித்துப்போட்டியிடுகின்றன.

புதிய ஜனநாயக முன்ணனி சார்பில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட முன்னாள் அமைச்சர்களான ஏ. எல்.எம்.அதாவுல்லாஹ், தயா கமகே, ஆகியோரின் தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்யப்பட்டது.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் பலத்த போட்டி நிலவும் என எதிர்பாக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலிருந்து 05 இலட்சத்தி
55 ஆயிரத்தி 432 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை தொகுதியில் 01 இலட்சத்தி 88 ஆயிரத்தி 222 வாக்காளர்களும், சம்மாந்துறை தொகுதியிலிருந்து 99 ஆயிரத்தி 727 வாக்காளர்களும், கல்முனை தொகுதியிலிருந்து 82 ஆயிரத்தி 830 வாக்காளர்களும், பொத்துவில் தொகுதியிலிருந்து 01 இலட்சத்தி 84 ஆயிரத்தி 653 வாக்காளர்களும், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )