நாம் ஏன் கனவு காண்கிறோம்?
மனிதர்கள் காணும் கனவுகள் எதனால் வருகிறது? எதனால் மூளை கனவுகளை உருவாக்குகின்றது? என்பதற்கு இதுவரையில் யாராலும் காரணம் கண்டறிய முடியவில்லை.
உறக்கத்தில் கண்கள் மூடியிருந்தாலும் மூளை அதன் கட்டுப்பாட்டையும் மீறி செயல்திறனை அதிகரிக்கும்போது கனவுகள் தோற்றம் பெறுகின்றன என்கிறார்கள் உளவியலாளர்கள்.
ஒரு நபரின் ஆன்மா அல்லது எண்ணங்களை பிரதிபலிக்கும் வடிவமே கனவுகள் எனக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் கனவுகளில் தோன்றும் சம்பவங்கள் என்பது நிஜ வாழ்க்கையுடன் பெரும்பாலும் ஒத்துப்போகாது.
சிறந்த மன நிலையில் இருக்கும் ஒருவர் காணும் கனவுகளை அவரால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், மன அழுத்தத்தில் இருக்கும் ஒருவருக்கு ஏற்படும் கனவுகளின் அர்த்தம் அடையாளம் காணப்படாமல் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆரோக்கியமான உறக்கத்தின் ஒரு பகுதியாகவே கனவு பார்க்கப்படுகிறது. ஆனால், கனவுகளுக்கான சரியான காரணம் இன்று வரையில் புரியாத புதிராகவே உள்ளது.