தலைமுடி அடர்த்தியாக வளர வெங்காய ஹேர் பெக் !
தலை முடிக்கு வெங்காயத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
வெங்காயத்திற்கு நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது. இதை தலை முடியில் பயன்படுத்துவதால் முடி கொட்டுவது தடுக்க படுகிறது.
வெங்காயத்தை துண்டுகளாக வெட்டி கொள்ளவும் மிக்ஸி யில் நன்றாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டி எடுத்து கொள்ளவும். வெங்காய திப்பிகள் முடிகளில் சேராதவாறு வெறும் சாறை மட்டும் பயன்படுத்தவும்.
வெங்காய சாற்றை முடியில் தடவும் முறை: வெங்காய சாறை எடுத்து தலையில் நன்றாக தடவவும். விரல்களால் சூழல் வடிவத்தில் நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடவும். வெங்காய வாசனை முடியில் இல்லாதவாறு வாசனையுள்ள ஷாம்பூவால் தலை நன்றாக அலசவும். வாரம் 1 முறை 2 மாதங்களுக்கு இந்த முறையை பின்பற்றி நல்ல பலன் பெறலாம். வெங்காய சாறுடன் வேறு சில பொருட்களை சேர்த்தும் வலுவான மற்றும் பொலிவான கூந்தலை பெறலாம்.
வெங்காய சாறுடன் தேன்
கால் கப் வெங்காய சாற்றை எடுத்துக் கொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் தேனை இந்த சாறுடன் கலக்கவும். இந்த சாறை எடுத்து தலையிலும் வேர்கால்களிலும் நன்றாக தடவவும். 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசவும்.
வெங்காய சாற்றை பயன்படுத்தும்போது தவிர்க்க வேண்டியவை
வெங்காய சாறை தயாரித்த பிறகு நன்றாக வடிகட்டி பயன்படுத்தவும். வெங்காய துகள்கள் தலையில் ஒட்டி கொண்டால் எடுப்பது சிரமமாக இருக்கும். வெங்காய சாறு பயன்படுத்தும்போது மென்மையான ஷாம்புக்களை பயன்படுத்த வேண்டும். ஆப்பிள் சீடர் வினிகர், பூண்டு போன்றவற்றையும் இதனுடன் சேர்த்து பயன்படுத்தலாம். வெங்காயத்தின் வாசனை பிடிக்காதவர்கள் இதனுடன் வேறு எண்ணெய்யை சேர்த்து பயன்படுத்தலாம். முதலில் ஒரு சிறிய அளவு பயன்படுத்தி ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை அறிந்து கொண்டு தொடர்ந்து பயன்படுத்துவது நல்லது.