அமெரிக்காவை தாக்கிய மில்டன் சூறாவளி

அமெரிக்காவை தாக்கிய மில்டன் சூறாவளி

அமெரிக்காவில் மில்டன் சூறாவளி புயல் உருவான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது. இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறும்போது, சூறாவளி பாதித்த பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடலோர காவல் படையினர் உள்பட ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

இந்நிலையில், புளோரிடா மாகாணத்தில் சீஸ்டா கீ பகுதியருகே அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8.30 மணியளவில் மில்டன் சூறாவளி புயல் கரையை கடந்தது. இதனால், மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது.

புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரத்தில் செயின்ட் லூசி கவுன்டி பகுதியில் சிலர் உயிரிழந்து இருக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சூறாவளி தாக்கியதில் நேற்றிரவு (11) மணியளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, இருளில் அவதிப்பட்டுள்ளனர். சூறாவளியால் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )